பருவநிலை மற்றும் தூய எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளல் – இந்தியா மற்றும் அமெரிக்கா
December 21 , 2021 1241 days 590 0
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து பருவநிலை மற்றும் தூய எரிசக்தி சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய படைப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு புதிய திட்டத்தினை அறிவித்துள்ளன.
“தொழில்நுட்பம் சார்ந்த எரிசக்தி தீர்வுகள் : சுழிய உமிழ்விற்கான புதிய படைப்புகள்” என்பதே இத்திட்டத்திற்கான தலைப்பாகும்.
இது அமெரிக்க இந்திய அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதியத்தின் புத்தாக்க மானியத்தினைப் பெறுவதற்கான அழைப்பினை விடுக்கிறது.
இது தொழில்நுட்பம் சார்ந்த முன்னணியினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவு வழங்குவதோடு இந்தத் துறையின் இந்திய – அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கூட்டு முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கும்.