பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள நெல்சன் எனுமிடத்தில் அமைந்த கூட்னே லேக் என்ற மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் கெய்லே மெரிட் இந்த நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டறிந்துள்ளார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தீவிரமான வெப்பக் காற்றலைகளே இவரின் இத்தகைய நிலைக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த வெப்பக் காற்றலைகளானது ‘வெப்ப குவிப்புப் பகுதி’ என்பதால் ஏற்பட்டது.