பருவநிலை மாற்றம் குறித்த இந்திய மக்களின் மனநிலை - 2022
May 9 , 2023 823 days 391 0
பருவநிலை மாற்றம் தொடர்பு குறித்த யேல் திட்டத்தால் இந்தக் கணக்கெடுப்பானது நடத்தப் பட்டது.
இதில் 54 சதவிகிதம் பேர் 'எச்சரிக்கை மிகுந்தவர்கள்', 20 சதவிகிதம் பேர், 'கவலை மிக்கவர்கள்', 11 சதவிகிதம் பேர், 'கவனம் மிக்கவர்கள்', மற்றும் 7 சதவிகிதம் பேர் 'தொடர்பற்றவர்கள்' என இந்தக் கணக்கெடுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 81% மக்கள் புவி வெப்பமடைதல் குறித்து கவலை கொண்டுள்ளனர்.
64% இந்தியர்கள் புவி வெப்பமடைதலை நிவர்த்தி செய்ய அரசாங்கம் இன்னும் அதிக அளவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
இந்தியாவில் குறைந்தபட்சம் 84% மக்கள் புவி வெப்பமடைதல் நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது என்று எண்ணுகின்றனர்.
74% பேர் அதன் விளைவுகளை அனுபவித்ததாகக் கூறுகின்றனர்.
57% மக்கள், பூமி பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெப்பமடைகிறது என்று எண்ணுகின்றனர்.
பருவநிலை மாற்றம் ஆனது தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்கள் (80%), இந்தியாவில் உள்ள மக்கள் (77%), வருங்காலத் தலைமுறை சார்ந்த மக்கள் (77%), தங்கள் சொந்தச் சமூகத்தில் உள்ளவர்கள் (72%) மற்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் (69%) தீங்கு விளைவிக்கும் என்று இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றுப் பதிலளித்த நபர்கள் கருதுகின்றனர்.