"பறவை இறக்கை" நிகழ்வு என்றும் அழைக்கப்படும் ஒரு பெரிய சூரிய வெடிப்பானது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
சுமார் ஒரு மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த பிளாஸ்மா கூறானது, புவியிலிருந்து நிலவிற்கு உள்ள தூரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
சூரியச் சுடர்கள் என்பது தீவிரமான காந்தச் செயல்பாட்டின் காரணமாக சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சின் திடீர் மற்றும் தீவிர வெடிப்புகள் ஆகும்.
இந்தச் சுடர்கள் ஆனது ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன என்பதோடு மேலும் சூரிய வெப்ப உமிழ்வு (CME) ஆனது வினாடிக்கு 250 கிலோமீட்டர் (கிமீ/வி) முதல் 3000 கிமீ/வி வரை பயணிக்கின்றன.
மிகப்பெரியச் சுடர்கள் "X-வகுப்பு சுடர்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
மிகச்சிறியவை A-வகுப்பு (நிகழ்வின் அருகாமையில் உள்ளவை), அதைத் தொடர்ந்து உள்ள சுடர்கள் B, C, M மற்றும் X என்று அழைக்கப்படுகின்றன.