பறவை போட்டுலிய நோய், சாம்பார் உப்பு ஏரி @ ராஜஸ்தான்
November 23 , 2019 2072 days 987 0
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராஜஸ்தானின் சாம்பார் உப்பு ஏரியில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்வுப் பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
நோய் பாதிக்கப்பட்ட பறவைகளில் மந்தமான தன்மை, மனச் சோர்வு, பசியற்றத் தன்மை, கால்கள் & இறக்கைகளில் பக்கவாதம், கழுத்து தரையைத் தொடுவது ஆகிய மருத்துவ அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இந்த நோய் பாதிக்கப்பட்ட பறவைகளால் பெருமளவு நடக்கவோ, நீந்தவோ, பறக்கவோ முடியவில்லை.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவைகளுக்குப் பறவை போட்டுலிய நோய்பாதிக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
பறவை போட்டுலிய நோய் என்பது ஒரு பக்கவாத, நச்சுகளை உட்கொள்வதால் அடிக்கடி ஏற்படும் ஒரு அபாயகரமான நோயாகும். இது ஒரு “சாத்தியமான காரணமாக” இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது. ஆனால் இது முழுமையாக உறுதிப்படுத்தப் படவில்லை.