பறவைக் காய்ச்சல் தொடர்பான இந்தியாவின் சுய அறிவிப்பு
November 2 , 2023 654 days 464 0
உலக விலங்கு நல அமைப்பு (WOAH) ஆனது, அதிக தொற்றினை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சல் (HPAI) அற்றதாக அறிவித்த இந்தியாவின் சுய-அறிவிப்பிற்கு வேண்டி அதன் ஒப்புதலை அளித்துள்ளது.
HPAI ஆனது பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட கோழி வளர்ப்புப் பண்ணை அமைந்த பகுதிகள் (அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகள்) மட்டுமே இதில் அடங்கும்.
இந்தியா இந்த நான்கு மாநிலங்களில் அமைந்துள்ள 26 கோழி வளர்ப்புப் பண்ணைகள் HPAI பாதிப்பற்றதாக ஒரு சுய பிரகடனத்தை உலக விலங்கு நல அமைப்பிடம் சமர்ப்பித்தது.
இந்தியா தற்போது முட்டை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் (130 பில்லியன்), கோழி இறைச்சி உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலும் (4.5 மில்லியன் டன்கள்) உள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியா 64 நாடுகளுக்கு கோழி இறைச்சி மற்றும் கோழி இறைச்சிப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம், 134 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயினை ஈட்டியுள்ளது.
பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஆனது இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிராவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.