பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளை வலுப்படுத்துவதற்கான குழு
April 8 , 2023 838 days 414 0
G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளை (MDBs) வலுப்படுத்தச் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 11 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைத் தலைவரான பேராசிரியர் லாரன்ஸ் சம்மர்ஸ் மற்றும் N.K. சிங் ஆகியோர் G20 நிபுணர் குழுவின் இணை-அமைப்பாளர்கள் ஆவர்.
21 ஆம் நூற்றாண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பலதரப்பு மேம்பாட்டு வங்கி சார்ந்த சூழல் அமைப்பிற்கான ஒரு செயல்திட்டத்தினை உருவாக்கச் செய்யும் பணியில் இந்தக் குழு ஈடுபடும்.
உலகளாவிய மேம்பாடு மற்றும் பிற சவால்களை மிகவும் திறம்பட்ட முறையில் எதிர் கொள்தல் மற்றும் அவற்றிற்காக நிதியளித்தல் தொடர்பாக பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை இது உருவாக்கும்.