தனது மாநிலத்தில் பலதார மணத்தைத் தடை செய்வதற்கான மசோதாவை அசாம் அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
துணைவி உயிருடன் இருந்து, சட்டப் பூர்வமாகப் பிரிக்கப்படாவிட்டால், அல்லது விவாகரத்து ஆணை அவர்களின் முந்தைய திருமணத்தை செல்லாதது ஆக்கவில்லை என்றால், எந்தவொரு தனிநபரும் வேறொரு திருமணம் செய்து கொள்வதை இந்த மசோதா தடை செய்கிறது.
ஆறாவது அட்டவணை பகுதிகளுக்கு சில விதிவிலக்குகள் பொருந்தக் கூடும்.
இந்த மசோதாவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையில் கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
பலதார மணத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் ஒரு நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.