TNPSC Thervupettagam

பலபடி சேர்ம மின்பகுளி சவ்வு எரிபொருள் கலன்

April 29 , 2024 18 days 83 0
  • இஸ்ரோ POEM3 எனப்படும் தனது சுற்றுப்பாதைத் தளத்தில் 100 W வகுப்பு பலபடி சேர்ம மின்பகுளி சவ்வு எரிபொருள் கலன் அடிப்படையிலான ஆற்றல் வழங்கீட்டு அமைப்பினை (FCPS) வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
  • இது விண்வெளியில் பலபடி சேர்ம மின்பகுளி சவ்வு எரிபொருள் கலன் செயல்பாட்டை மதிப்பிடுவதையும் எதிர்காலத் திட்டங்களுக்கான அமைப்புகளின் வடிவமைப்பை எளிதாக்குவதற்கும் தரவுகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பலபடி சேர்ம மின்பகுளிச் சவ்வு (PEM) எரிபொருள் கலன்கள் ஆனது, புரோட்டான் பரிமாற்ற சவ்வு எரிபொருள் கலன்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது புரோட்டான்களை கடத்தும் பலபடி சேர்மச் சவ்வை மின்பகுளியாகப் பயன்படுத்துகின்றது.
  • பொதுவாக ஹைட்ரஜன் ஆனது எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த கலன்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையில் இயங்குகின்றன மற்றும் மாறிவரும் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவற்றின் வெளியீட்டுத் திறனை விரைவாக மாற்றும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்