பலவழிப் பாதை கொண்ட தடுப்பிலா போக்குவரத்து சுங்கக் கட்டண முறை
September 5 , 2025 18 days 53 0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது குஜராத்தில் உள்ள NH-48 சாலையில் உள்ள சோரியாசி கட்டணச் சாவடியில் முதல் பல வழிப்பாதை கொண்ட தடுப்பில்லா போக்குவரத்துக் கட்டண (MLFF) முறையைத் தொடங்கியது.
NHAI ஆணையத்தின் கீழ் உள்ள இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL) ஆனது, MLFF முறையை செயல்படுத்துவதற்காக ICICI வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஹரியானாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-44யில் (NH-44) உள்ள கரௌண்டா கட்டணச் சாவடியில் மற்றொரு MLFF அமைப்பு விரைவில் செயல்படுத்தப்படும்.
நடப்பு நிதியாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 25 MLFF அடிப்படையிலான சுங்கச் சாவடிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
MLFF, RFID ரீடர்கள் கருவிகள் மற்றும் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) கொண்ட ஒளிப்படக் கருவிகள் மூலம் FASTag மற்றும் வாகனப் பதிவு எண் (VRN) அங்கீகாரத்தைப் பயன்படுத்தி தடையற்ற கட்டண வசூலை செயல்படுத்துகிறது.
MLFF செயல்படுத்தல், சுங்க வருவாய் வசூலை மேம்படுத்துவதையும், சிறந்த மற்றும் திறம் மிக்க தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.