இந்திய தொல்லியல் ஆய்வு மையம் (ASI) வரலாற்றுச் சிறப்புமிக்க பலிராஜ்கர் தளத்தில் 2026-ஆம் ஆண்டில் புதிய அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
பீகாரின் மதுபானி மாவட்டத்தில் அமைந்துள்ள பலிராஜ்கர், பண்டைய விதேகப் பேரரசின் முக்கிய மையமாக இருந்தது.
இந்தியப் புராணங்களில் இடம் பெறும் புகழ்பெற்ற மன்னர் பலியுடன் தொடர்புடைய இந்த தளம் அவருடைய தலைநகராக இருந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் சுங்கர், குஷாணர், குப்தர் மற்றும் பால வம்ச காலத்தின் கலாச்சார எச்சங்களை வெளிப்படுத்தியுள்ளன.
இது 1904-ஆம் ஆண்டின் பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 1938-இல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.