TNPSC Thervupettagam

பல்லுயிர் வளங்காப்புத் திட்டம்

October 17 , 2025 15 hrs 0 min 18 0
  • இந்திய சமூக நலன் மற்றும் மேம்பாட்டுச் சபையானது (ISWDC), நீலகிரி பிரிவு வனத்துறையுடன் இணைந்து, நீலகிரியின் நடுகானியில் ஒரு பல்லுயிர் வளங்காப்புத் திட்டத்தை நிறைவு செய்தது.
  • இந்தத் திட்டமானது, நடுகானிப் பகுதியில் பசுமைப் பரவலை மேம்படுத்துவதையும் பூர்வீக சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, கூடலூர் வனப் பிரிவில் அமைந்துள்ள நடுகானியின் பால்மேடு பகுதியில் 100 பூர்வீக மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • நடுகானியில் தரமிழந்த வன நிலத்தை மீட்டெடுப்பது, தாவர அடர்த்தியை அதிகரிப்பது மற்றும் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையில் அமைதியான சக வாழ்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்