ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவர் பல்லோன்ஜி மிஸ்திரி, மும்பையில் தனது 93 வயதில் காலமானார்.
மிஸ்திரியின் குடும்பம் இந்தியக் கட்டுமானம் மற்றும் மனை விற்பனைப் பெரு நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தினை இயக்கி வருகிறது.
இது 150 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
மேலும், தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஓமன் நாட்டின் சுல்தானுடைய நீலம் மற்றும் தங்க நிறத்தினாலான அல் ஆலம் அரண்மனை ஆகியவை இந்த நிறுவனம் கட்டமைத்த முக்கியத்திட்டங்களில் சிலவாகும்.
பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன் சைரஸ் மிஸ்திரி 2016 ஆம் ஆண்டில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.