பல்வேறு திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கீடு
August 18 , 2021 1461 days 736 0
2024 ஆம் ஆண்டுக்குள் பல்வேறு திட்டங்களின் கீழ் ஏழை மக்களுக்கு செறிவூட்டப் பட்ட அரிசியினை வழங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
ஏழைப் பெண்கள் மற்றும் ஏழைக் குழந்தைகளின் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அவசியமான ஊட்டச்சத்துகள் இல்லாதிருத்தல் போன்றவை அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் வெவ்வேறு திட்டங்களின் கீழ், அரசானது அரிசியினை விநியோகிக்க உள்ளது.