பல்வேறு பருவநிலைச் சூழல்களுக்கான நெகிழ் திறன் கொண்ட அதிக மகசூல் தரும் 109 பயிர் வகைகள்
August 18 , 2024 349 days 305 0
புது டெல்லியில் அதிக மகசூல் தரும், பல்வேறு பருவநிலைச் சூழல்களுக்கான நெகிழ் திறன் கொண்ட மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 வகை பயிர்களைப் பிரதமர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட 61 பயிர்களின் 109 வகைகளுள் 34 வகைகள் ஆனது வயல் பயிர்கள் மற்றும் 27 வகைகள் ஆனது தோட்டக்கலை பயிர்கள் ஆகும்.
வயல் பயிர்களில், சிறு தானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, இழைப் பயிர்கள் மற்றும் பிற உற்பத்தி திறன் மிக்க பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு தானியங்களின் விதைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.