முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனத் தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக இத்திட்டம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப் பட்டது.
இது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
காமராஜரின் பிறந்தநாளான 2026 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் இந்தப் பெயர் மாற்ற ஆணை வெளியிடப்பட்டது.
விரிவாக்கப்பட்ட இத்திட்டம் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியின் பிறந்தநாளான 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 34.48 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.