பள்ளிக்கூட புத்தகப்பையின் சுமையைக் குறைப்பதற்கான வல்லுநர் குழு
October 29 , 2018 2615 days 829 0
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது பள்ளிக் குழந்தைகளின் புத்தகப்பையின் சுமையைக் குறைப்பதற்கான திட்ட வரைவை தயாரிப்பதற்காக வல்லுநர் குழுவை ஏற்படுத்தியுள்ளது.
இக்குழு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையத்தின் (NCERT - National Council of Educational Research and Training) பேராசிரியரான ரஞ்சன் அரோரா தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் குழந்தைகளின் உடல் எடையில் 10 சதவீதத்திற்கு அதிகமாக பள்ளிக்கூட புத்தகப் பையின் எடை இருக்கக் கூடாது என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.