சீனாவின் பெய்ஜிங் நகரிலிருந்து 100 மைல்கள் தொலைவில் அமைந்த 40,000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரம் தொடர்பான ஒரு சான்றினை அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கற்காலக் கலாச்சாரமானது தற்போதைய மனித இனத்தின் அழிந்து போன இனங்களுக்காக அறியப் படுகிறது.
இந்த மனித இனமானது (ஹோமினின்ஸ்) ஓச்சர் எனும் நிறமியைக் கல்லிலிருந்து கத்தி போன்ற கருவிகளை உருவாக்கப் பயன்படுத்தினர்.
இந்தத் தளமானது நிஹேவான் வடிகால் (Nihewan Basin) பகுதியில் அமைந்துள்ளது.
இது சீனாவின் வடக்கு மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளமான பகுதியாகும்.