பழங்குடியினப் பெண்களுக்கான சுகாதார வசதிகள் குறித்த அறிக்கை
August 17 , 2023 861 days 397 0
பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழுவானது அது தொடர்பான அறிக்கையினைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
நாட்டிலுள்ள பழங்குடியின மக்களின் சுகாதார நிலைகள் குறித்தத் தரவுகளை மத்திய அரசு வெவ்வேறு நிலைகளில் பிரிக்கவில்லை என்பதை இது எடுத்துரைக்கிறது.
இது M.P. ஹீனா காவிட் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும்.
அரிவாள் வடிவ இரத்தசோகை நோய் மற்றும் G-6 PD குறைபாடு போன்ற மரபணுக் குறைபாடுகள் பழங்குடியினர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.
மற்ற சமூகக் குழுவினருடன் ஒப்பிடும் போது தொழுநோய், காசநோய், காலரா போன்ற தொற்று நோய்களின் பாதிப்பு இந்த இனத்தவரில் அதிகமாக உள்ளது.
இந்தியாவின் சராசரிப் பாலின விகிதமான 930 என்ற மதிப்புடன் ஒப்பிடும் போது அந்தக் குழுவினரில் 990 என்றப் பாலின விகிதம் பதிவாகியுள்ளது.
குழந்தை திருமணம், இளம் வயதில் கருவுறுதல், குறைவான மதிப்பிலான உடல் பருமன் அளவு மற்றும் அதிகளவிலான இரத்த சோகை ஆகியவை பழங்குடிப் பெண்களிடையே அதிக விகிதத்திலான உயிரிழப்பினை ஏற்படுத்துகின்றன.