அமேசான் குளோபல் மற்றும் இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கட்டமைப்பு (TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India) ஆகியவற்றுடன் இணைந்து “பழங்குடியினரிடம் செல்க” என்ற ஒரு பிரச்சாரத்தை பழங்குடியின விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் ரேணுகா சிங் தொடங்கியுள்ளார்.
இந்தக் கூட்டாண்மைப் பிரச்சாரமானது TRIFED மற்றும் 700ற்கும் மேற்பட்ட இந்தியப் பழங்குடியினர்களின் சமூகப் பொருளாதார நலன்களுக்கு உதவுதல், பழங்குடியினர்களின் கைத்தொழில்கள் மற்றும் கலைகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
TRIFED
1987 ஆம் ஆண்டில் TRIFED உருவாக்கப்பட்டது.
இது மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அளவிலான ஒரு தலைமை அமைப்பாகும்.
இது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு 13 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுச் செயல்படுகின்றது.
இது பழங்குடியினரால் காடுகளிலிருந்துப் பெறப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட பொருட்களுக்கு நியாயமான விலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.