பழங்குடியினருக்கான புதிய மனித வள மேம்பாட்டுக் குறியீடு
June 20 , 2023 789 days 412 0
இந்தியா முழுவதும் உள்ள 75 எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுவினரின் (PVTGs) சமூகங்களுக்காக ஒரு மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டினை (HDI) மத்திய அரசு உருவாக்க உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 22,000க்கும் மேற்பட்டக் கிராமங்களில் சுமார் 28 லட்சம் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுவினர் வாழ்கின்றனர்.
இது 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்ட மூன்று ஆண்டு காலத்திற்கான 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான PVTG திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.