பழங்குடியினர் ஆராய்ச்சிக்கான தமிழ்நாடு புத்தாய்வு மாணவர் திட்டம்
November 8 , 2024 294 days 305 0
மாநில அரசானது, பழங்குடியினர் ஆராய்ச்சிக்கான தமிழ்நாடு புத்தாய்வு மாணவர் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
பழங்குடியினச் சமூகங்கள் தொடர்பான சில துறைகளில் பணிபுரியும் 45 ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 70 மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புத்தாய்வு மாணவர் உதவித் தொகைத் திட்டத்தினை வழங்குவதற்கான சில வழிகாட்டுதல்களை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆராய்ச்சி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் Ph.D. அல்லது முனைவர் பட்டம் பெற்றதற்குப் பிந்தைய ஆராய்ச்சிக்காக அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 25,000 ரூபாய் புத்தாய்வு மாணவர் உதவித்தொகை கிடைக்கும்.
இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதங்களுக்கு மாதாமாதம் சுமார் 10,000 ரூபாய் புத்தாய்வு மாணவர் உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது ஆண்களுக்கு 50 ஆகவும், பெண்கள் மற்றும் திருநர்களுக்கு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.