பழங்குடியினர்களின் தயாரிப்புப் பொருட்களை ஊக்குவிப்பதற்கான திட்டம்
April 23 , 2023 836 days 322 0
மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகமானது, ‘வடகிழக்குப் பிராந்தியத்தினைச் சேர்ந்த பழங்குடியினரின் தயாரிப்புப் பொருட்களை ஊக்குவிப்பதற்கான சந்தைப் படுத்துதல் மற்றும் தளவாட மேம்பாடு’ (PTP-NER) என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி உள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் இந்தத் திட்டமானது தனிநபர்களைச் சுய தொழில் கொண்ட மற்றும் சுயசார்புடைய நபர்களாக மாற்றுவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
வடகிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த பழங்குடியினர்களின் தயாரிப்பு பொருட்களின் மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதலை இது மேம்படுத்தும்.