பழஞ்சோறு கஞ்சியின்/நொதித்த சோற்றின் ஆரோக்கிய நன்மைகள்
January 10 , 2026 287 days 367 0
ஐந்து ஆண்டு கால ஆராய்ச்சி ஆய்விற்குப் பிறகு பழஞ்சோறு கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த பொது விழிப்புணர்வை தமிழக அரசு அதிகரித்து வருகிறது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (SMCH) இந்த ஆராய்ச்சியை நடத்தியது.
பழஞ்சோறு கஞ்சியில் (பழைய சோறு) நார்ச்சத்து, எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச், புரதம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன என்று ஆய்வில் கண்டறியப் பட்டு உள்ளது.
இது இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்ற தாதுக்களை வழங்குகிறது.
இந்த உணவில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளிட்ட இரைப்பை குடல் கோளாறுகளில் இருந்து மீள இது உதவுகிறது.