பழம்பெரும் பாரம்பரிய பாடகர் கிரிஜா தேவி காலமானார்.
October 26 , 2017 2931 days 1096 0
புகழ்பெற்ற பாடகர் மற்றும் பத்ம விபூசன் விருது பெற்ற கிரிஜா தேவி காலமானார்.
பனாரஸ் கரானாவின் புகழ்பெற்ற பாடகரான இவர் அப்பாஜி என்று அன்பாக அழைக்கப்படுகிறார். இவர் 1972ல் பத்மஸ்ரீ, 1989ல் பத்மபூஷன் மற்றும் 2016ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகளை வாங்கியுள்ளார்.
இவர் ‘தும்ரி’ யின் ராணி என்று அழைக்கப்படுகிறார்.
இது ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் த்ருபாத், காயல் போன்ற இசை வடிவமாகும்.
தும்ரி என்பது உத்திரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து தோன்றிய இந்தியப் பாரம்பரிய இசையின் பகுதி வடிவம் கொண்ட பொது வகையைச் சேர்ந்ததாகும்.
இதில் இசை இலக்கணம் பின்பற்றப்படாது. மேலும் இது குறைந்த அல்லது கலப்பு ராகங்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த இசை வடிவமானது அதன் குரல் மற்றும் கருவி வடிவங்களில் உள்ளது.
இதன் கருப்பொருள்கள் முதன்மையாக காதல் சம்பந்தப்பட்டவையாகவும், குறிப்பாக காதலர்களின் பிரிவு மற்றும் கிருஷ்ணரின் குறும்புத்தனங்கள் அவரை விளையாட்டுப் பிள்ளையாக சித்தரிப்பது ஆகிய விஷயங்களிலும் கவனம் கொள்கிறது.