இந்திய இராணுவமானது, 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பவன் நடவடிக்கையில் உயிரிழந்த தியாகிகளை அதிகாரப்பூர்வமாக நினைவு கூர்கிறது.
ஆபரேஷன் பவன் என்பது சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் முக்கிய வெளிநாட்டு இராணுவ நடவடிக்கையாகும் என்பதோடுஇது 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடத்தப்பட்டது.
இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உள்ளிட்ட போராளிக் குழுக்களின் ஆயுத நீக்கத்தினை இது நோக்கமாகக் கொண்டது.
இதில் 1,171 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதோடு 3,500க்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்தனர் என்ற நிலையில்இது வெளிநாடுகளில் இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கால இழப்புகளில் ஒன்றாகும்.
மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் 1987 ஆம் ஆண்டில் அவரது துணிச்சலுக்காக பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றார்.
புது டெல்லியில் உள்ள தேசியப் போர் நினைவிடத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் படும்.