பவன் ஹன்ஸ் நிறுவனத்தில் முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்கான புதிய மூலோபாய ஏல ஆவணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது இதன் மொத்த பங்குகளில் 51% அரசிடமும் 49% ONGC நிறுவனத்திடமும் உள்ளன.
1985 ல் தொடங்கப்பட்ட இந்த பவன் ஹன்ஸ் ஒரு மினி ரத்னா – 1 வகை பொதுத்துறை நிறுவனமாகும்.
இது பல்வேறு மாநில அரசுகளுக்கு குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகள், வைஷ்ணவோ தேவி ஆலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவைகளை வழங்குகின்றது.
இந்நிறுவனத்தின் விளம்பர முழக்கம் “நாங்கள் உங்களுக்காகப் பறக்கின்றோம்” என்பதாகும்.