பிலிப்பைன்ஸ் நாடானது, தென்கிழக்கு ஆசியாவின் முதல் பவளப்பாறை லார்வா கருவங்கி (கிரையோ பேங்க்) ஒன்றை அமைத்துள்ளது.
இது பவளப்பாறை முக்கோணப் பகுதியில் கடல்சார் பல்லுயிரியலை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மையமானது, -196°C வெப்பநிலையில் பவளப்பாறை லார்வாக்களை வெப்பவழி கண்ணாடியாக்கம் (விட்ரிஃபிகேஷன்) எனப்படும் செயல்முறையைப் பயன்படுத்தி பாதுகாக்கும்.
பாதுகாக்கப்பட்ட லார்வாக்களை பவளப்பாறை மறுசீரமைப்பு அல்லது ஆராய்ச்சிக்காக புதுப்பிக்க முடியும் என்பதோடு இது பவளப்பாறையின் மரபணு பன்முகத் தன்மையின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
கிரையோபேங்க் பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பிராந்திய வலையமைப்பின் ஒரு பகுதி ஆகும்.
போசிலோபோரா, அக்ரோபோரா மற்றும் கேலக்ஸியா போன்ற பவளப்பாறை இனங்கள் ஆனது பரந்த வளங்காப்பு முயற்சிகளுக்காக உகந்த உறைபனி நெறிமுறைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
அவசர பருவநிலை நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் 2050 ஆம் ஆண்டிற்குள் 90% வரையிலான உயிருள்ள பவளப் பாறைகள் இழக்கப் படலாம் என்று அறிவியலாளர்கள் எச்சரிப்பதுடன், கடல் வளங்காப்பிற்கு இது போன்ற கிரையோ வங்கிகள் முக்கியமானவையாகும்.