TNPSC Thervupettagam

பவளப்பாறைகள் இடமாற்றம் - கிரேட் நிக்கோபார்

June 15 , 2026 15 hrs 0 min 58 0
  • கிரேட் நிக்கோபார் தீவில் பவளப்பாறைகளை இடமாற்றம் செய்வதற்கு நான்கு புதிய இடங்களை இந்திய விலங்கியல் ஆய்வகம் அடையாளம் கண்டுள்ளது.
  • இது கலத்தியாவில் முன்மொழியப்பட்ட சரக்கு மாற்றுத் துறைமுகத்தால் பாதிக்கப் படவுள்ள பவளப்பாறை தொகுதிகள் மற்றும் ராட்சத சிப்பிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பவளப்பாறை இடமாற்றம் என்பது பவளப்பாறைகளை பொருத்தமற்ற பகுதிகளிலிருந்து அவை சிறப்பாக வாழக்கூடிய மற்றும் வளரக்கூடிய இடங்களுக்கு இடமாற்றம் செய்வதாகும்.
  • இடமாற்றம் செய்யப்பட்ட பவளப்பாறைத் தொகுதிகள், புவிசார் நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) குறியீடுகளைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும்.
  • பவளப்பாறைகள் நிடாரியா தொகுதியைச் சேர்ந்த முதுகெலும்பற்ற விலங்குகளாகும், மேலும் ஒவ்வொரு பவளப்பாறையும் பாலிப்ஸ் எனப்படும் நுண்ணிய உயிரினங்களால் ஆனது.
  • பவளப்பாறைகள் ஜூக்ஸாந்தெல்லே எனப்படும் நுண்ணிய பாசிகளிலிருந்து அவற்றின் நிறத்தைப் பெறுகின்றன, அவை அவற்றுடன் ஒரு கூட்டுயிரி உறவில் வாழ்கின்றன.
  • ஆரோக்கியமான பவளப்பாறைகளுக்கு வெப்பமான, தெளிவான மற்றும் ஆழமற்ற நீர்நிலைகள் தேவைப் படுகின்றன, பொதுவாக 23°C முதல் 29°C வரையிலான வெப்ப நிலையில் அவை வாழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்