TNPSC Thervupettagam

பவ்யா திட்டம்

March 31 , 2026 12 hrs 0 min 38 0
  • இந்தியாவின் தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 'பாரத தொழில் வளர்ச்சித் திட்டத்திற்கு' (BHAVYA) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டம் 6 ஆண்டுகளில் (2026-2032) ₹33,660 கோடி பட்ஜெட்டில், உடனடியாகத் தொழிலைத் தொடங்கக்கூடிய 100 'பிளக்-அண்ட்-பிளே' தொழில் பூங்காக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தொழில் பூங்காக்களானது 100-1000 ஏக்கர் பரப்பளவில் (வடகிழக்கு மற்றும் மலைப்பகுதிகளில் குறைந்தபட்சம் 25 ஏக்கர்) தயார்நிலை உள்கட்டமைப்புடன் உருவாக்கப்படும்.
  • அடிப்படை மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஏக்கருக்கு ₹1 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும்.
  • இது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் (DPIIT) கீழ் உள்ள தேசியத் தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகத்தால் (NICDC) செயல்படுத்தப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்