TNPSC Thervupettagam

பஸ்சிம் லேஹர் பயிற்சி (XPL – 2022)

January 30 , 2022 1235 days 538 0
  • இந்தியக் கடற்படையின் மேற்குக் கடற்படைப் பிரிவானது மேற்குக் கடற்கரையின் அருகே பஸ்சிம் லேஹர் (XPL – 2022) எனப்படும் ஒரு கூட்டுக் கடல்சார் பயிற்சியினை மேற்கொண்டது.
  • இந்தப் பயிற்சியானது இந்தியக் கடற்படை, இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் மற்றும் கடலோரக் காவற்படை ஆகியவற்றின் இடையேயான ஒரு ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
  • மேற்குக் கடற்படைப் பிரிவானது இந்தியக் கடற்படையின் 3 படைப் பிரிவுகளுள் ஒன்றாகும் (தலைமையகம் – மும்பை).
  • இதர இரண்டு படைப் பிரிவுகளாவன; கிழக்குக் கடற்படைப் பிரிவு (தலைமையகம் – விசாகப் பட்டினம்) மற்றும் தெற்குக் கடற்படைப் பிரிவு (தலைமையகம் – கொச்சின்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்