வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (Agricultural and Processed Food Products, Export Development Authority – APEDA) இமாச்சலப் பிரதேச தோட்டக்கலை உற்பத்திப் பொருட்களின் சந்தைப் படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் கழக நிறுவனத்துடன் இணைந்து 5 தனித்துவ மிக்க ஆப்பிள் வகைகள் அடங்கிய முதல் சரக்குப் பெட்டகத்தினை பஹ்ரைன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
புதிய நாடுகளுக்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக வேண்டி இது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
டார்க் பரோன் காலா, ராயல் டெலீசியஸ், ஸ்கார்லெட் ஸ்பர், ரெட் வேலாக்ஸ் மற்றும் கோல்டன் டெலிசியஸ் உள்ளிட்ட 5 ஆப்பிள் வகைகள் பஹ்ரைன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன.
முதல் சரக்குப் பெட்டகமானது APEDA நிறுவனத்தில் பதிவு செய்துள்ள DM எண்டர்பிரைசெஸ் எனும் நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்த ஆப்பிள்களானது, முன்னணி விற்பனையாளரான அல் ஜசிரா குழுமத்தினால் நடத்தப் படும் ஆப்பிள் விளம்பர நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஆப்பிள் விளம்பர நிகழ்ச்சியானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் 75வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தொடங்குகிறது.