பாகிஸ்தானின் முதல் மனித விண்வெளித் திட்டம் அறிவிப்பு
October 29 , 2018 2472 days 774 0
சீனாவின் உதவியுடன் 2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்காக பாகிஸ்தான் விண்வெளி மற்றும் புற வளிமண்டல ஆய்வு ஆணையம் (Space and Upper Atmosphere Research Commission -SUPARCO) மற்றும் சீன நிறுவனமொன்றிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.