TNPSC Thervupettagam

பாகிஸ்தானில் 27வது அரசியலமைப்புத் திருத்தம்

November 14 , 2025 14 hrs 0 min 7 0
  • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 27வது அரசியலமைப்புத் திருத்தம் ஆனது எதிர்க் கட்சிகளின் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியது.
  • இந்தத் திருத்தம் கூட்டுப் பணியாளர் குழுவின் தலைவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்புப் படைத் தலைவரை நியமிப்பதற்கும், ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கும் முன்மொழிகிறது.
  • இது உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை மாற்றுவதற்கும், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் முயல்கிறது.
  • இது சட்டமாக மாறுவதற்கு முன்பு அரசாங்கத்திற்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவையாகும்.
  • எதிர்க்கட்சி குழுக்கள் இந்த நடவடிக்கை அரசியலமைப்பை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றன அதே நேரத்தில் சில சட்ட வல்லுநர்கள் இதை ஒரு நீதித்துறைக்கான சீர்திருத்தமாகக் கருதுகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்