பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் - ஆண்டின் சிறந்த ICC ஆடவர் டி20 அணியின் தலைவர்
January 22 , 2022 1611 days 849 0
2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த ICC ஆடவர் T20I அணியின் தலைவராக பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ICC அமைப்பின் 2021 ஆம் ஆண்டிற்கான அணியில், ஓர் ஆண்டில் தங்கள் செயல்திறன், மட்டை வீச்சு, பந்து வீச்சு அல்லது அனைத்துச் செயல்திறன் மூலம் அனைவரையும் கவர்ந்த சிறந்த 11 வீரர்களை அங்கீகரித்துள்ளது.
11 பேர் கொண்ட இந்த அணியில் எந்த ஒரு இந்திய ஆண் வீரரும் இடம் பெறவில்லை.
இருப்பினும், 2021 ஆம் ஆண்டிற்கான ICC மகளிர் T20I அணியின், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மட்டுமே ஆவார்.
2018 (தொடக்க வீரர்) மற்றும் 2019 (மூன்றாமிடம்) ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டின் சிறந்த T20I அணியில் ஸ்மிருதி மூன்றாவது முறையாக இடம் பிடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான ICC மகளிர் T20I அணிக்கான அணித் தலைவராக இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.