சர்வதேச பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக் கண்காணிப்பு அமைப்பான நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் சாம்பல் நிறப் பட்டியலில் (grey list) ஜூன் மாதம் வரை பாகிஸ்தான் நாட்டின் பெயர் இருக்க வாய்ப்புள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பாரீஸ் நகரில் அமைந்துள்ள நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் (FATF - Financial Action Task Force) சாம்பல் நிறப் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ய வழிவகுத்த பணமோசடியைப் பாகிஸ்தான் சரி பார்க்கத் தவறியதற்காக சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற்றது.