பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு
August 2 , 2017 2828 days 1121 0
பாகிஸ்தான் நாட்டின் இடைக்காலப் பிரதமராக முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஷாஹித் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தானில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் சாபாஷ் ஷெரிப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக பொறுப்பேற்கும் வரை அப்பதவியில் நீடிப்பார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 28–ந் தேதி பதவி விலகினார்.