TNPSC Thervupettagam

பாகிஸ்தான் நாட்டிற்கு விரிவாக்க நிதி உதவி (EFF)

May 15 , 2025 19 hrs 0 min 16 0
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழுவானது, பாகிஸ்தான் நாட்டிற்கு 1 பில்லியன் டாலர்கள் (சுமார் 8,500 கோடி ரூபாய்) மதிப்பிலான நிதியை "உடனடியாக வழங்குவதற்கு" அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
  • பாகிஸ்தான் நாட்டிற்கு IMF நிதியத்தினால் வழங்கப்படும் விரிவாக்க நிதி உதவியின் (EFF) ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கல் மேற்கொள்ளப்பட்டது.
  • உலகின் பிற பகுதிகளுக்கு இறக்குமதி செய்யும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான தொகைகளை செலுத்தப் போதுமான பணம் இல்லாத நாடுகளுக்கு EFF வசதியின் கீழ் IMF உதவி வழங்குகிறது.
  • பாகிஸ்தான் நாட்டின் ஒட்டு மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த பத்தாண்டுகளில் தேக்க நிலையில் உள்ளது அதாவது, 2023 ஆம் ஆண்டில் சுமார் 338 பில்லியன் டாலர்களாக இருந்த அதன் மதிப்பானது 2017 ஆம் ஆண்டில் இருந்ததை விட குறைவாகும்.
  • IMF நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் இந்தியா வாக்களிப்பதைத் தவிர்த்த நிகழ்வு, IMF நெறிமுறையின் வரம்புகளுக்குள் அதன் எதிர்ப்பைப் பிரதிபலிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையைப் போலல்லாமல், IMF வாரியத்தின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக மட்டுமே வாக்களிக்க முடியும் அல்லது வாக்களிப்பதைத் தவிர்க்க முடியும் என்ற நிலையில் அதிகாரப் பூர்வமாக அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்