342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் தேசியச் சட்டமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பாகிஸ்தான் துணை சபாநாயகர் சூரி தள்ளுபடி செய்தார்.
இது பாகிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் விதிகளுக்கு எதிரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு, தேசிய சட்டமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதி ஆல்விக்கு இம்ரான் கான் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், ஜனாதிபதி ஆல்வி இரு சபைகளையும் கலைத்தார்.
90 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்படும் என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நிராகரிக்கப் பட்டதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
அந்நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தானாக முன்வந்து (suo motu cognizance) இந்த வழக்கினை எடுத்துக் கொண்டார்.
இதற்கிடையில், ஜனாதிபதி ஆல்வி தற்காலிகப் பிரதமரை நியமிக்கும் வரை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக தொடரலாம்.
ஆனால், முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவைத் தற்காலிகப் பிரதமர் பதவிக்கு இம்ரான் கான் பரிந்துரைத்தார்.