பாக் நீர்ச்சந்தியை அதிவேகமாக நீந்திக் கடந்த இந்தியர்
March 23 , 2023 939 days 540 0
புனேவைச் சேர்ந்த நீச்சல் வீரரான சம்பன்னா ரமேஷ் ஷெலார், 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாக் நீர்ச்சந்தியை அதிவேகமாக நீந்திக் கடந்த இந்தியர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலானத் தொலைவினை இவர் நீந்திக் கடந்தார்.
இந்தத் தொலைவினை இவர் 5 மணி 30 நிமிடங்களில் கடந்தார்.
இதில் மேற்கொள்ளப்பட்ட முந்தையச் சாதனை காலம் 8 மணி 26 நிமிடங்கள் ஆகும்.