TNPSC Thervupettagam

பாக்பட் – தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தளம்

September 12 , 2020 1810 days 873 0
  • இந்தியத் தொல்லியல் துறையானது (ASI – Archaelogical survey of India) 2018 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாக்பட் தளம் மற்றும் அதன் மிச்சங்களைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தளமாக அறிவித்துள்ளது.
  • இந்தத் தளமானது கி.மு. 2000 ஆண்டைச் சேர்ந்த போர் புரியும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு இருந்ததற்கான ஆதாரத்தைக் கொண்டுள்ளது.
  • 3 ரதங்கள், பூட்டப்பட்ட சவப்பெட்டிகள், பாதுகாப்புக் கலசங்கள், வாள் மற்றும் தலைக் கவசங்கள் ஆகியவை இந்தத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில முக்கியப் பொருட்களாகும்.
  • ASI ஆனது இதனைகி.மு. இரண்டாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த பண்டைய ஹரப்பா நாகரிகத்தின் ஒரு மிகப்பெரிய இடுகாடுஎன்று குறிப்பிடுகின்றது.
  • ASI-ன் அறிவிக்கையானது பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை தளங்கள் & மிச்சங்கள் சட்டம், 1958 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் வெளியிடப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்