பாக்யாங் விமான நிலையத்தில் இந்திய விமானப் படையின் AN32 விமானம் தரையிறக்கம்
January 19 , 2019 2400 days 679 0
முதன்முறையாக இந்திய விமானப் படையின் அன்டோனோவ் 32 என்ற வகுப்பைச் சேர்ந்த விமானம் (AN-32/ Antonov-32) நாட்டின் உயரமான விமானத் தளங்களில் ஒன்றான சிக்கிமின் பாக்யாங்க் விமானத் தளத்தில் வெற்றிகரமான தரையிறக்கத்தை மேற்கொண்டிருக்கின்றது.
இந்திய சீன எல்லையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு யுக்திசார் மையத்தில் இவ்விமானத் தளம் அமைந்திருப்பதாலும், கடல் மட்டத்தை விட 4500 அடிகள் உயரத்தில் இது அமைந்திருப்பதாலும் இந்த வெற்றிகரமான தரையிறக்கமானது ஒரு மிகப்பெரிய முக்கியத்துவத்தை அடைந்திருக்கின்றது.
கடந்த வருடம் இந்த விமான நிலையத்தில் இந்திய விமானப் படையின் ட்ரோனியர் வகை விமானம் தரையிறங்கியிருந்தது.