பாக்ஸ் சிலிக்கா பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அமெரிக்கா தலைமையிலான மூலோபாய கூட்டணியான பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இந்தியா முறையாக இணைந்தது.
இந்தக் கூட்டணி முக்கியமான கனிமங்கள், குறைக்கடத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இது உலகளாவிய AI மற்றும் குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதையும், அணிசேரா நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் பங்கேற்பு அதன் பொறியியல் திறமையையும் விரிவடையும் குறைக் கடத்தி உற்பத்தியையும் பயன்படுத்திக் கொள்ளும் என்ற நிலையில் இதில் உருவாக்க நிலையில் உள்ள பத்து ஆலைகளும் அடங்கும்.
உறுப்பினர் நாடுகளில் ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், கத்தார், தென் கொரியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.