பாக்ஸ் சிலிக்கா என்பது குறைக்கடத்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் அமெரிக்கா தலைமையிலான முன்னெடுப்பாகும்.
இந்த முன்னெடுப்பானது சிலிக்கான், அருமண் தாதுக்கள், ஆற்றல், மேம்பட்ட உற்பத்தி மற்றும் கணினி உள்கட்டமைப்பை உள்ளடக்கியது.
அமெரிக்க வெளியுறவுத்துறையால் வழி நடத்தப்படுகின்ற இது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இந்த குழுவில் ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதார நாடுகள் அடங்கும்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவானது பாக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இல்லை.