உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாக்கூர் ஸ்ரீ பாங்கி பிஹாரி ஜி கோயிலின் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் இடை நீக்கம் செய்தது.
கோயிலின் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அசோக் குமார் தலைமையில் ஓர் உயர் அதிகாரக் குழு அமைக்கப்பட்டது.
இராஜா ரத்தன் சிங் கொடையாக அளித்த நிலத்தில், 1864 ஆம் ஆண்டில் ஒரு பிரபலமான இந்து யாத்திரைத் தலமாக விளங்கும் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
இராஜ் போக் மற்றும் ஷயான் போக் என அழைக்கப்படும் இரண்டு பிரிவுகளுக்கு இடையேயான நீண்டகாலத் தகராறுகள் 1938 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கோயில் நிர்வாகத்தைப் பாதித்துள்ளன.
2016 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு ஆனது, தொடர்ச்சியானத் தகராறுகளுக்கு மத்தியில் மதுராவின் உரிமையியல் நீதிமன்றத்திற்கு இறுதி நிர்வாக ஒப்புதல்களை வழங்கியது.
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆனது, பல பேர் காயமடையவும், உயிரிழக்கவும் வழிவகுத்தது. இது பொது நல வழக்கு மற்றும் ஒரு சுயாதீன அறக்கட்டளைக்கான மாநிலத்தின் முன்மொழிவிற்கு வழிவகுத்தது.
உச்ச நீதிமன்றம் ஆனது, 2025 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச ஸ்ரீ பாங்கி பிஹாரி ஜி கோயில் அறக்கட்டளை அவசரச் சட்டத்தினை இடை நிறுத்தியதால், உயர் நீதிமன்ற மறு ஆய்வு நிலுவையில் உள்ளது.
இந்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியதோடு, இதன் அனைத்து சவால் மனுக்களையும் உயர் நீதிமன்றத்தின் முடிவின் கீழ் வைத்தது.