பாடி கௌசிக் ரெட்டி மற்றும் தெலுங்கானா மாநில அரசுக்கு இடையிலான வழக்கு 2025
August 5 , 2025 11 days 61 0
பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்க மனுக்களை முடிவு செய்யும் போது தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகருக்கு 122 அல்லது 212 ஆகிய சரத்துகளின் கீழான அரசியலமைப்புச் சட்ட விலக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
122 மற்றும் 212 ஆகிய சரத்துகள், பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தடுக்கின்றன, ஆனால் தகுதி நீக்க வழக்குகளில் அவை சபாநாயகரைப் பாதுகாக்காது.
இது தெலுங்கானாவின் 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குத் தாவிய 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்காகும்.
கட்சி உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து கைவிட்டதற்காக 2024 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்க மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பத்தாவது அட்டவணையானது சட்டமன்ற விதிகளைப் பின்பற்றி தகுதி நீக்க மனுக்களை முடிவு செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் அளிக்கிறது.
சபாநாயகர் ஏழு மாதங்களுக்கும் மேலாக அறிவிப்புகளை வெளியிடுவதையும் மனுக்கள் குறித்து முடிவு செய்வதையும் தாமதப்படுத்தியதால், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு மேற்கொள்ளப்பட்டது.
மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கைகளை முடிக்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த செயல்முறையை தாமதப் படுத்தினால் பாதகமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தது.