மியூனிக்கை தளமாகக் கொண்ட 'வொர்த் எ ஜர்னி' என்ற பயண இதழ் தொகுத்த 'உலகின் 100 சிறந்த அருங்காட்சியகங்கள் 2026' பட்டியலில், பாட்னாவின் பீகார் அருங்காட்சியகம் உலகளவில் 9வது இடத்தையும், ஆசியாவில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இது நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகம் (10வது இடம்) மற்றும் பாரிஸின் லூவர் அருங்காட்சியகம் (31வது இடம்) ஆகியவற்றை விட முன்னணியில் உள்ளது.
பார்வையாளர் மதிப்புரைகள், தரவு பகுப்பாய்வு மற்றும் நிபுணர் மதிப்பீடுகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்ட 2026 ஆம் ஆண்டின் முதல் 100 பட்டியலில் இடம் பெற்று உள்ள ஒரே இந்திய அருங்காட்சியகம் இதுவாகும்.
மெக்சிகோ சிட்டியின் தேசிய மானுடவியல் அருங்காட்சியகம் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து மாட்ரிட்டின் பிராடோ அருங்காட்சியகம் (2வது இடம்) மற்றும் டென்மார்க்கின் லூசியானா நவீன கலை அருங்காட்சியகம் (3வது இடம்) ஆகியன அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.