உலகெங்கிலும் உள்ள நாடுகள் 2034 ஆம் ஆண்டிற்குள் பாதரசம் சார்ந்த பல் பூச்சுக் கலவையைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துவதற்கு பாதரசம் குறித்த மினாமாட்டா உடன்படிக்கையின் கீழ் ஒப்புக் கொண்டுள்ளன.
பாதரச மாசுபாட்டிலிருந்து மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஜெனீவாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப் பட்டது.
பாதரசம் குறித்த மினாமாட்டா உடன்படிக்கை 2013 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டு 2017 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த உடன்படிக்கையில் உறுப்பினர்களாக உள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) மனித ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் முதல் பத்து இரசாயனங்களில் பாதரசத்தையும் ஒன்றாகப் பட்டியலிடுகிறது.
சருமத்தைப் பொலிவுறச் செய்யும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிறிய அளவிலான தங்கச் சுரங்கங்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வருவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.