பாதரசம் மீதான மினமாட்டா உடன்படிக்கையின் 4வது உறுப்பினர்கள் மாநாட்டில், படிப்படியாக அகற்றச் செய்வதற்கு என்று திட்டமிடப்பட்டுள்ள பாதரசம் சேர்க்கப்பட்ட பொருட்களின் ஒரு பட்டியலை விரிவுபடுத்துவதற்கு இதில் பங்கேற்ற நாடுகள் ஒப்புக் கொண்டன.
இந்த மாநாடானது இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது.
இந்த மாநாடானது பாதரச வெளியீடு மற்றும் மனிதர்கள் வெளியிடும் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து சுற்றுச்சூழலையும் மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.