பாதிக்கப்பட்ட அனல் மின் நிலையங்களை புதுப்பிப்பதற்கான அதிகாரமளிக்கப்பட்ட குழு
July 31 , 2018 2702 days 914 0
பாதிக்கப்பட்ட அனல் மின் நிலையங்களின் பிரச்சினைகளை குறிப்பிட்டுக் காட்டுவதற்காக அமைச்சரவை செயலாளர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது.
இக்குழு ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம், மின்துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் மற்றும் மின்சாரத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டு கடன் வழங்குபவர்கள் ஆகியவர்களை பிரதிநிதிகளாகக் கொண்டுள்ளது.